கிறிஸ்தவம் ஒரு மதமல்ல! அது ஒரு வாழும் வழி முறை!
நாம் நீதிமானாக முடிமா? ஏன் முடியாது என்று நினைக்கிறோம். அனால் அது நடைமுறையில் நடக்க மாட்டேன் என்கிறது! நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நீதிமான் என்ற நிலையை அடையவே முடியவில்லை! நாம் செய்கிற நற்கிரியைகள் ஒழுக்கமான வாழ்க்கை முறை பத்தவில்லை! அதலால் இவை போதவில்லை! நம் முயற்சிகள் தோல்விடைந்து மனமுறிவடைந்து நம்பிக்கை இழக்கிறோம்!
சுவிசேஷத்தின் நற்செய்தியே தேவன் நம்மை நீதிமானக்குகிறார் என்பதுதான்! ஆனால் கடுமையான பயிற்சிகள் கொண்ட நீண்ட பயணம் இது! அபிரகாமைபோல் நாம் விசுவாச அடிச்சுவடுகளில் நடக்க வேண்டும் என்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று! ரோ.4:12 இந்த அடிச்சுவடுகளையே இயேசு 'வழி' என்றார். ஆனால் இந்த வழி புலப்படாதபடி இன்று அழிந்துபோய் வெறும் செத்த கிரியைகள் ஆகிய மத பழக்க வழக்கங்களே நிறைந்து இருக்கின்றன! நீதிமான் ஆவது மறக்கப்பட்டு போயிற்று!
மலை பிரசங்கத்தில் 'பாக்கியவான்' என்ற சொல் பலவகை குனங்களைகொண்டு எளிதாக நாம் நீதிமானாக வாய்ப்பை காண்பிக்கிறது! அவை அவரைப்போல மாற நமக்கு வழி காட்டுகின்றன! இந்த குணங்கள் ஒன்று தவறினாலும் நம்மிடம் நீதிமானகும்படி விசுவாசம் செயல்படாது!
சுருக்கமாக சொல்வதனால் நம்மை நீதிமானாகுவதுதான் கிறிஸ்தவத்தின் ஒரே வேலை! அல்லது நம்மை கிறிஸ்துவைபோல் மாற்றுவதுதான் கிறிஸ்தவத்தின் ஒரே வேலை! இந்த நோக்கத்தை விட்டுவிட்டு கிருஸ்தவ மதத்தை பற்றிகொள்வதால் எவ்வித பயனும் இல்லை!
பொதுவாக.. நாம் கிறிஸ்துவைபோல் மாற வேண்டுமானால் (அல்லது) நீதிமானாக வேண்டுமானால் மிகவும் பிரயாசப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் எல்லாரிடமும் இருக்கிறது! அதுவே நாம் இந்த தேவ சாயலை அடையாதபடி தடுத்து விடுகிறது! ஆனால் உண்மை அப்படி இல்லை! தேவனே நம்மை மாற்றுகிறபடியால் நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை! நம்மால் முடியாது என்று தேவன் அறிவார்!
ஆகையால் விசுவாசித்தால் மட்டும் போதுமானது! தேவன் நம்மை மாற்றுகிறார்! விசுவாசம் ஒரு போராட்டம் என்பதும் உண்மைதான்! அதை நமக்கு செய்ய தெரியவில்லை என்பதே நம் தோல்விக்கு காரணம். இதை மட்டும் நன்கு கற்றுகொண்டோமல் நம்மால் யாரும் மலைக்ககூடிய சிறந்த வாழ்க்கை வாழலாம்! நாம் விசுவாசத்தால் போராடவும் நம்பிக்கையால் மேற்கொள்ளவும் வேண்டும். இதைத்தான் இந்த மலை பிரசங்கம் எப்படியென்று சொல்கிறது!
நம்முடைய அறியாமை பெரிய தடை! தேவன் நம்மிடம் எந்தவித முயற்சியும் எதிர்பார்க்கவில்லை. எல்லா தேவ தன்மைகளும் நமக்குள் இருக்கின்றன என்கிறார். ஆனால் நம்மைபார்த்தால் ஒன்றையும் காணோம்! ஆகையால் அவை நம்மிடம் இருப்பதாக சொல்கிற தேவ வார்த்தையை விசுவசித்தால்தான் அவைகளை நாம் நம்மிடம் காண முடியும்! நாம் விசுவாசத்தோடு போராடித்தான் இவைகளை பெற முடியும் என்கிறார்.
ஆனால் எந்த சபையிலும் இப்படி விசுவாசத்தால் போராடி தேவ சாயாலகும்படி போதனை இல்லை! நாம் எதை விசுவாசிக்க வேண்டும், எதை மேற்கொள்ள வேண்டும், நம் விரோதி யார், எப்படி போராடுவது போன்ற அடிப்படை போதனைகள் தெளிவாக இல்லை! இவைகளை அசட்டை செய்து அவரை விசுவாசிப்பதையே அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டார்கள்.
ஆனால் இந்த அறியாமையை மேற்கொள்ளுவது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை! விழிப்பு இருந்தால் போதும்! அவைகள் எல்லாவற்றையும் மேற்கொண்டு விடலாம். இதுதான் மலை பிரசங்கத்தின் முக்கிய செய்தி (தொடரும்)
சனி, 27 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
